வடிவேலுவை வைத்து பெரும்பஞ்சாயத்து நடந்து வரும் ‘24ம் புலிகேசி’ படத்தின் இயக்குநர் அறிவிப்பு எதையும் வெளியிடாமல் சைலண்டாக தனது அடுத்த முடித்திருக்கிறார். இத்தகவலை சற்றுமுன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை இயக்கிய சிம்புதேவன் மீண்டும் அதன் தொடர்ச்சியாக இயக்குவதாக ‘24ம் புலிகேசி’ வடிவேலுவின் தலையீடிகளால் கால்வாசியில் நின்றது. அது தொடர்பான எந்தப் பஞ்சாயத்தும் சுமுக நிலையை நோக்கிநகரவேயில்லை.

இந்நிலையில் இனி 24ம் புலிகேசிக்காக காத்திருந்து காலத்தை வீணடிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் தயாரிப்பாளர்களுக்குக் கதை சொல்ல ஆரம்பித்த சிம்புதேவனுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு தந்து சொந்த நிறுவனமான பிளாக் டிக்கெட் கம்பெனியில் படம் இயக்க வாய்ப்புத் தந்தார்.

அத்தகவலை படம் முடியும் வரை ரகசியமாய் வைத்திருந்த சிம்புதேவன் சற்றுமுன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில்,..நண்பர்களே இயக்குநர் வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் மிகக் குறுகிய காலத்திலேயே எனது அடுத்த படத்தை இயக்கிமுடித்துவிட்டேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதன் புரமோஷன் வேலைகளை இன்று துவங்குவதால் முதல் கட்டமாக இச்செய்தியை வெளியிடுகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி. 24ம் புலிகேசியும் விரைவில் துவங்கும் என்று நம்புகிறேன்’ என்று பதிவிட்டிருக்கிறார் சிம்புதேவன்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 7 மணிக்கு நடிகர் சூர்யா வெளியிடுகிறார்.