நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்க உள்ள திரைப்படம் 'மாநாடு' . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.  மலேசியாவில் ஆரம்பமாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பிற்க்கான ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது சிம்பு 'மாநாடு' படத்திற்கு முன் கேங் ஸ்டாராக நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார்.

கெளதம் கார்த்தி, போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில், சிம்பு கேங் ஸ்டாராக நடிக்கிறார். இந்த படத்திற்காக, சிம்பு  25 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.

இந்தப்படம் கன்னடத்தில் 'சிவராஜ் குமார்' நடிப்பில் வெளியாகி  சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'முஃப்தி' என்ற படத்தின் ரீமேக்காக தமிழில் எடுக்கப்பட உள்ளது. கன்னடத்தில் இப்படத்தை இயக்கிய நார்தன் இந்த படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.