Asianet News TamilAsianet News Tamil

Simbu: சின்னத்திரை காதல் ஜோடிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு - வைரலாகும் வீடியோ

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, சின்னத்திரை காதல் ஜோடிகளான மதன் - ரேஷ்மா தம்பதிக்கு சர்ப்ரைஸாக வீடியோ கால் செய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 

Simbu surprise video call to madhan reshma
Author
Tamil Nadu, First Published Nov 22, 2021, 6:35 PM IST

சின்னத்திரை சீரியல் பிரபலங்களான மதனும், ரேஷ்மாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவர்கள் இருவருக்கு அண்மையில் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. 

இந்த திருமணத்தில் சின்னத்திரை நட்சத்திரங்கள், சினிமா பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Simbu surprise video call to madhan reshma

இந்நிலையில், தங்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ் வாழ்த்து குறித்து நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, மதன் - ரேஷ்மா தம்பதிக்கு சர்ப்ரைஸாக வீடியோ கால் செய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Simbu surprise video call to madhan reshma

இந்த மகிழ்ச்சியான தருணத்தை வீடியோ பதிவு செய்துள்ள ரேஷ்மா, அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிம்பு சர்ப்ரைஸாக வீடியோ கால் செய்ததும் தனது கணவர் மதன் மிகுந்த உற்சாகமடைந்து கத்தியதாக ரேஷ்மா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிம்புவுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios