Simbu Vs Dhanush : சிம்பு - தனுஷ் படங்கள் ஒரே நாளில் மோத உள்ளதால், பாக்ஸ் ஆபிஸில் வெல்லப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி உள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் சிம்பு - தனுஷ். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும், இவர்களது ரசிகர்கள் இன்றளவும் எலியும், பூனையுமாக சண்டையிட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர். தற்போது அவர்களது மோதலுக்கு தீனி போடும் விதமாக சிம்பு, தனுஷ் நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் வெந்து தணிந்தது காடு. கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக புதுமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

அன்றைய தினம் வெந்து தணிந்தது காடு படத்துக்கு போட்டியாக தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படமும் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கி உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

சிம்பு - தனுஷ் படங்கள் ஒரே நாளில் மோத உள்ளதால், பாக்ஸ் ஆபிஸில் வெல்லப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி உள்ளது. விரைவில் இப்படங்களின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Thalapathy 66 : பீஸ்ட் படக்குழு செய்ததை அப்படியே காப்பி அடிக்கும் தளபதி 66 படக்குழு