தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ஆதரவு பெருகி வரும் நிலையில், நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, தன் உணர்ச்சி பொங்கிய ஆதங்கத்தை செய்தியாளர்கள்  சந்திப்பின் போது வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் பிறந்து, தமிழகத்தில் வளர்ந்து, தமிழ் மொழி பேசி, தமிழில் ஊறி வளர்ந்த எனக்கு,  என்னுடைய பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை ஒரு போதும்  விட்டுகொடுக்க மாட்டேன் என்றும்....

இப்படி தன்னுடைய பாரம்பரியமான விளையாட்டை தடுத்தால் கேட்காமல் இருக்க தமிழர்கள் என்ன அனாதைகளா என சீறியுள்ளார் சிம்பு.

சிம்புவின் இந்த பேச்சு மேலும் ஜல்லிக்கட்டு ஆதரவலர்களுக்கு வலு சேர்த்துள்ளது எனக் கூறலாம்.