Asianet News TamilAsianet News Tamil

சித்தார்த்திற்காக மீண்டும் சிம்பு எடுத்த அவதாரம்... ரொமாண்டிக் மோடுக்கு மாறிய எஸ்டிஆரால் ஹப்பியான ரசிகர்கள்... யாருடன் ஜோடி போடுறாரு தெரியுமா?

இந்தப் படத்திற்காக சிம்பு நீண்ட காலமாக தொடாமல் இருந்த ஒரு அவதாரத்தை திரும்ப எடுக்க உள்ளார். 

Simbu Sing Romantic Song With Andrea in Takkar Movie
Author
Chennai, First Published Nov 27, 2019, 11:56 AM IST

சமீபத்தில் சித்தார்த் நடித்த "சிவப்பு மஞ்சள் பச்சை", "அருவம்" ஆகிய படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதையடுத்து சத்தமே இல்லாமல்  "டக்கர்" என்ற படத்தில் முழு வீச்சில் நடித்து முடித்துள்ளார். அந்தப்படத்தை "கப்பல்" பட இயக்குநர் கார்த்திக் இயக்கியுள்ளார். இதில் திவ்யான் ஷா, கெளசிக், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த காதல் படமான "டக்கர்" படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

Simbu Sing Romantic Song With Andrea in Takkar Movie

பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள படத்தில் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்காக சிம்பு நீண்ட காலமாக தொடாமல் இருந்த ஒரு அவதாரத்தை திரும்ப எடுக்க உள்ளார். கால்ஷீட் பிரச்னை காரணமாக பட வாய்ப்புகள் கைவிட்டுப் போன நிலையில், தற்போது சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் இருந்து வருகிறார் சிம்பு. இந்நிலையில் மீண்டும் திரைப்படங்களில் பாட முடிவெடுத்துள்ள சிம்பு, அதை டக்கர் படத்தில் இருந்து தொடங்க உள்ளார். 

Simbu Sing Romantic Song With Andrea in Takkar Movie

இந்தப்படத்தில் 'ரெயின்போ' என்று தொடங்க உள்ள பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். மேலும் இதில் டபுள் ட்ரீட்டாக சிம்புவுடன் இணைந்து அந்தப் பாடலை பாடியுள்ளது நம்ம ஆண்ட்ரியா என்பது தான். செம்ம ரொமாண்டிக் சாங்கான ரெயின்போ பாடலை சிம்பு, ஆண்ட்ரியா ஜோடி பாடியுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இப்போதே இருமடங்காக அதிகரித்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios