சிம்பு ரசிகர் தனது தங்கையின் வாய் பேசமுடியாத பெண்ணை  சிம்புவிடம் அழைத்து வந்துள்ளார். சிம்புவோ, கவலைப்படாதே இனி அவள் என் பொறுப்பு என்று கூறி சிகிச்சை அளித்து பேச வைக்க உதவி செய்துள்ளார். 

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற சிம்புவை பார்க்க அழைத்து வந்தனர். அந்த சிறுமி சிம்புவுக்கு ஐஸ்கிரீம் ஊட்டிவிட்டு மகிழ்ந்த அந்த சிறுமி சிம்புவை பார்த்து சிம்பு மாமா, சிம்பு மாமா என்று அழைத்தார். பேச முடியாமல் இருந்து பேசும் அந்த குட்டி குழந்தை பேசுவதைக் கேட்டு சிம்புவுக்கு மட்டும் அல்ல பார்வையாளர்கள் அனைவருக்கும் கண் கலங்க வைத்துள்ளது. சிம்பு எமோஷனலாகி கண்கலங்கினார். 

அப்போது மேடையில் பேசிய  சிம்புவின் தீவிர ரசிகன். இன்று இந்த குழந்தை பேசுகிறது என்றால் அதற்கு எங்கள் அண்ணன் சிம்பு தான் காரணம். அவர் உண்மையான தமிழர் என்று கூறி உணர்ச்சிவசப்பட்டார். தமிழ் உணர்ச்சியில் தான் அவர் அனைத்தையும் செய்கிறார். ஆனால் இருக்கிறவர்கள் தான் அவரை போட்டி அடிக்கிறார்கள்.  அதை கேட்ட சிம்பு, என்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்பது முக்கியமில்லை, நம்ம புள்ள  பேசுது அது தான் முக்கியம் என்றார்.