சிம்புவுக்கு எதிரிகள் வெளியே இல்லை. அவர் கூடவே தான் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், மூன்று தினங்களுக்கு முன்பு சிம்பு குறித்து அவரது நண்பர் மகத் போட்ட பதிவு பெரும் சர்ச்சையாகி வருகிறது. சுவாமி ஐயப்பனுக்கு விரதம் இருப்பதாகச் சொல்லிவிட்டு ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடலாமா? என்ற கேள்விகள் சிம்புவை நோக்கிக் குவிகின்றன. 

சினிமாவில் தனக்கு எதிராக மலைபோல் குவிந்த குற்றச்சாட்டுகளிலில்ருந்து நல்ல பிள்ளையாக மீண்டு வர கடந்த 5ம் தேதியன்று ஐயப்ப சுவாகிகள் தரிசனத்துக்காக மாலை போட்டு சிம்பு சுவாமிகளாக மாறினார்.அதற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அடுத்து வெளியான அவரது புகைப்படங்களிலும் முகத் தோற்றத்தில் நல்ல மாற்றங்கள் தெரிந்தன. விரதம் இருந்து மலைக்குச் சென்று திரும்பியவுடன் ‘மாநாடு’படத்தில் நடிக்க முடிவு செய்த சிம்பு அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாக பேச்சு வார்த்தைகள் நடத்தி வந்தார்.

இந்நிலையில் சிம்புவின் நடவடிக்கைகளுக்குக் களங்கம் ஏற்படும் விதமாக மூன்று தினங்களுக்கு முன்பு அவர் ஒரு ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்த அவரது நண்பரும் நடிகருமான மகத்,...லஞ்ச் வித் சிம்பு சுவாமிகள் என்று பதிவிட்டிருந்தார். அப்பதிவைக் கண்டு ரத்தம் கொதித்த ஐயப்ப பக்தர்கள்,...Replying to @MahatOfficial ஸ்டார் ஓட்டல்ல விரதம் இருக்கிறாரு..  பாத்ரூம்ல டப்பிங் பேசுறாரு..  
சூட்டிங் வர்றத தவிர மத்த எல்லாம் கரெக்டா பண்றாரு.. 😏😏
இன்னுமா இவனுங்கள உலகம் நம்புது... 😠 என்று அனல் கக்குகிறார்கள். மகத்தின் பதிவுக்கு பதிலளித்த இன்னொரு சிம்பு ரசிகர்,...Replying to 
@MahatOfficial...எவ்வளவு திறமை இருந்தாலும் தலைகனம் வாழ்க்கையை மாற்றி விடும்...சிம்புவின் வெறி தன ரசிகன் நான்...ஆனால் அது சிம்புவை நேரில் பார்த்த நொடிக்கு முன் வரை என்று ஆனது....சிறிய புன்னகை அல்லது ரசிகன் பக்கம் பார்வை என்று இல்லாமல் நான் வாங்கிய ஆட்டோகிராப் கிழித்து தான் எறிந்தேன்...என்று சிம்புவை துகிலுரித்திருக்கிறார்.