சிம்புவின் இந்த ரீ எண்ட்ரியை உற்சாகமாக கொண்டாடி வரும் அவர் ரசிகர்களுக்கு, செக்க சிவந்த வானம திரைப்படம் திருவிழாவகவே அமைந்துவிட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவை மாஸாக பார்த்து பூரித்து போன அவரது ரசிகர்களுக்கு மேலும் சந்தோஷம தரும்படியான ஒரு செய்தியை சமீபத்திய பேட்டி ஒன்றின் போது டி.ஆர். தெரிவித்திருக்கிறார்.

நிகழ்ச்சி ஒன்றின் போது பேசிய அவர், செக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து நெகிழ்ந்து போயிருக்கிறார். அப்போது பேசிய அவர் “ சிம்பு திருமணத்துக்கு ஓகே சொல்லிட்டார். பெண் பார்க்கும் வேலையை எங்களிடமே ஒப்படைத்துவிட்டார்.இதனால் எங்கள் பொறுப்பு இன்னமும் கூடி இருக்கிறது.

அவருக்கு ஏற்ற  ஒரு பெண்ணை நாங்களும் குடும்பமாக தேடி வருகிறோம். கடவுள் தான் அப்படி ஒரு பெண்ணை எங்கள் கண்ணில் காட்ட வேண்டும் என தெரிவித்திருக்கிறார். பின்னே சிம்புவிற்கு பெண் பார்ப்பது என்றால் சாதாரண விஷயமா என்ன?... சிம்புவே ஓகே சொன்னதால் முழு வீச்சில் அவருக்கு பெண் தேடி வருகின்றனர் சிம்பு வீட்டார். 

இதனால் விரைவிலேயே அவருக்கு திருமணம் நடக்க போகிறது என மகிழ்ச்சியில் இருக்கின்றனர் அவரின் ரசிகர்கள். சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார். எப்படியும் 2019ல் அவரை ஜோடியாக பார்க்கலாம் என்பது உறுதி, அந்த ஜோடி யார் என்பது மட்டும் தான் இப்போதைக்கு சஸ்பென்ஸ்…