மீண்டும் இயக்குனராகும் சிம்பு...10 கதைகள் ரெடியாம்..அவரே சொன்ன சூப்பர் அப்டேட் இதோ

சிம்பு இதற்காக பத்து கதைகள் தன்னிடம் தயாராக இருப்பதாகவும், தனது ஐம்பதாவது படத்தை நடித்து முடித்தவுடன் இயக்கத்தில் இறங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

simbu planning for his next directorial

மாநாடு வெற்றியை தொடர்ந்து தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து மூன்றவது முறையாக சிம்பு- கௌதம் மேனன் - ஏ.ஆர். ரஹ்மான்  கூட்டணி அமைந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட இந்த படம் குறித்த அதிக எதிர்பார்ப்பு இருந்தது.  இந்த படத்தில் சிம்பு 19 வயது இளைஞன் போன் மாறுவதற்காக படும் முயற்சியை எடுத்துள்ளார். அதோடு வெகுவான உடல் எடையையும் குறைத்து வாழ்த்துக்களை பெற்றார் சிம்பு. 

மேலும் செய்திகளுக்கு...தவறாக நடந்துகொண்ட தீவிரவாதியை கொன்றதால்...பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளும் கண்ணம்மா!

 

அந்த எல்லா கஷ்டங்களுக்கு கைகொடுத்தது இந்த படம் என்றே கூறலாம். நெல்லையில் இருந்து  மும்பைக்கு செல்லும் இளைஞன் கேங்ஸ்டர்களிடம் சிக்கிக்கொண்டு பின்னர் தானும்  கேங்ஸ்டராக மாறும் அதிரடி கதைகளை கொண்ட இந்த படம் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்து விட்டது. தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு...மீண்டும் செந்தில்- கோவை சரளா கிக் கம்போ..வெளியானது புதிய பட அப்டேட்

simbu planning for his next directorial

மேலும் செய்திகளுக்கு...பாக்கியாவை பார்த்து சந்தேகிக்கும் ராதிகாவின் அண்ணன..கணவரின் திருமணம் என தெரியாமல் சாதிக்க துடிக்கும் பாக்கியா

இந்நிலையில்  தான் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கப் போவதாக சமீபத்தில் சிம்பு தெரிவித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு வல்லவன் என்னும் படத்தை இயக்கியசிம்பு  நாயகனாக நடித்திருந்தார். நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இருவருக்கும் இடையே காதலும் மலர்ந்தது. பின்னர் சிறிது காலத்தில் அந்த காதல் முறிவை சந்தித்தது.  அப்போது மாபெரும் வரவேற்பை பெற்ற வல்லவனை தொடர்ந்து படம் எதையும் சிம்பு இயக்கவில்லை. தற்போது மீண்டும் படம் இயக்க உள்ளதாக சிம்பு தெரிவித்துள்ளது ரசிகர்களை குதுக்கப்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிம்பு இதற்காக பத்து கதைகள் தன்னிடம் தயாராக இருப்பதாகவும், தனது ஐம்பதாவது படத்தை நடித்து முடித்தவுடன் இயக்கத்தில் இறங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என தகவல் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios