தற்போது பத்து தல படத்தில் இருந்து வெளியாகி உள்ள கிளிஃப்ஸில் சிம்பு கேங் ஸ்டாருக்கே உரித்தான கருப்பு நிற ஆடையுடனும் பிளாக் பெப்பர் ஸ்டைலில் காணப்படுகிறார்.

சிம்புவின் சமீபத்திய பிளாக் பாஸ்டர் படமான மாநாடு படத்தை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய இரண்டு படங்களில் பிஸியாக இருக்கிறார். இதில் மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இந்த படம் இயக்குனர், நடிகர் என இருவருக்குமே நீண்ட நாள் கழித்து கிடைத்த வெற்றியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து வெந்து தணிந்தது காடு என்னும் படத்தின் மூலம் 10 வருடத்திற்கு பிறகு இயக்குனர் கௌதம் மேனன் உடன் கைகோர்த்துள்ளார் சிம்பு.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறது. அந்த படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது. தமிழ்நாட்டில் படத்தை வெளியிடும் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளது. இதில் சித்தி இத்னானி நாயகியாக நடிக்க இவர்களுடன் ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் மற்றும் இரண்டு சிங்கிள்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும் செய்திகளுக்கு...தோழிகளுடன் பீச்சில் ரேம்ப் வாக் போடும் ..ஹாட் ஹன்சிகா...

இதற்கிடையே சிம்புவின் தந்தையும், பிரபல இயக்குனருமான டி ஆர் ராஜேந்திரன் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சைக்காக தந்தையை அமெரிக்கா அழைத்து சென்ற சிம்பு தற்போது நாடு திரும்பிய கையேடு பத்து தல படத்தில் செட்யூல்களை முடித்து வருகிறார். இந்த படத்தில் இருந்து தற்போது கிளிஃப்ஸ் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..குட்டை கவுனுடன்...வெளிநாட்டில் கவர்ச்சி பரப்பிய ஹன்சிகா..வீடியோ உள்ளே!

ஸ்டுடியோ கிரீன் கே ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் கேங்ஸ்டராக சிம்பு தோன்றுகிறாராம். கிருஷ்ணா இயக்கி உள்ள இதற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், கலையரசன், ப்ரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம் என பலரும் நடித்துள்ளனர்.

தற்போது படத்தில் இருந்து வெளியாகி உள்ள கிளிஃப்ஸில் சிம்பு கேங் ஸ்டாருக்கே உரித்தான கருப்பு நிற ஆடையுடனும் பிளாக் பெப்பர் ஸ்டைலில் காணப்படுகிறார். அவர் மடியில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. அவருக்கு பின்னால் அணு சித்தாரா நிற்பது போன்ற காட்சிகள் தான் அது. இந்த படத்தில் அனுசித்தாரா சிம்புவின் தங்கையாக நடிக்கலாம் என்றும் மடியில் இருப்பது அவரது மகளாக இருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு...வரவர கிளாமர் தூக்குதே...சேவல் பட நாயகி பூனம் பஜ்வாவின் லோ நெக் போட்டோஸ்...

View post on Instagram