பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதன் மூலம் புகழின் உச்சியை அடையலாம் என்பது தான் பிரபலங்களின் கருத்து. அதே பிக் பாஸ் மூலம் தங்கள் இமேஜ் டேமேஜ் ஆகவும் வாய்ப்பிருக்கிறது என்பதையும் இவர்கள் அறிவார்கள். கத்தி மேல் நடக்கும் விளையாட்டு தான் இது என்ற அறிந்த பிறகும் கூட இதில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர் திரைத்துறை பிரபலங்கள். காரணம் , இப்படியாவது பட வாய்ப்புகள் கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பு தான். 

அந்த வகையில் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற ஒவ்வொருவருமே இன்று மக்கள் மத்தியில் பிரபலமாக தான் ஆகி இருக்கிறார்கள். பிக் பாஸில் மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட ஜூலி தான் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் கலக்கலாக முன்னேறிக்கொண்டிருக்கிறார்.அதே போல தான் ரைசா, ஹரீஷ்கல்யாண், ஆரவ், பரணி, சினேகன் என அனைவர் வாழ்க்கையிலும் எதிர்பாராத அளவிலான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனுக்கு முதல் சீசன் போல வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், மக்கள் மத்தியில் இந்த சீசன் போட்டியாளர்களும் ஓரளவு ரசிகர்களை சம்பாதித்திருக்கின்றனர் என்பது தான் உண்மை. பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வருகை தந்திருக்கும் போட்டியாளர்களின் பேச்சிலிருந்தே இதனை அறிந்து கொள்ளலாம்.

அதிலும் நேற்றைய நிகழ்ச்சியின் போது பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தந்த சென்றாயன் பேசும் போது விஜி, ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா என அனைவருக்குமே மக்கள் மத்தியில் நல்ல ரீச் என தெரிவித்திருந்தார். ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக நிறைய பேர் இருப்பதாகவும் சென்றாயன் அப்போது தெரிவித்திருந்தார். 

மேலும் அவர் எலிமினேட் ஆன பிறகு சிம்புவை நேரில் சந்தித்தது குறித்து பேசும் போது, ரித்விகாவை பற்றி சிம்பு அதிகம் விசாரித்தார் என கூறி இருந்தார். இந்த பிக் பாஸில் பிரபலமான ஒரு நடிகையுடன் சிம்பு ஒரு படத்தில் நடிக்கப்போவதாகவும் தெரிவித்திருக்கிறாராம். அது வேறு யாரும் இல்லை ஐஸ்வர்யா தானாம். இது ரசிகரகளுக்கு அதிர்ச்சி அளித்தாலு, பிக் பாஸில் எதிர்மறை விமர்சனத்துக்கு ஆளானவர் ஐஸ்வர்யா. இதனால் எதிர்மறை விமர்சனங்களுக்கு பெயர் போன சிம்பு அவருக்கு ஆதரவு அளித்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை தானே.