செக்கச் சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார் மணிரத்னம். இந்தப்படமும் மல்டி ஸ்டாரர் படமாகவே உருவாகவிருக்கிறதாம்.

பல நடிகர்கள் என்றதுமே இது "பொன்னியின் செல்வன்" கதை என்கிற செய்திகள் வருகின்றன. மேலும், இந்தப்படத்தில் முக்கியமான கேரக்ட்டர்களில் நடிக்க விக்ரம் மற்றும் சிம்பு ஆகியோரிடம் பேசியிருக்கிறாராம் இயக்குனர் மணிரத்னம்.

நாயகியாக நடிக்க ஐஸ்வர்யாராயிடம் பேசி அவரையும் ஒப்புக்கொள்ள வைத்துவிட்டாராம். இன்னொரு நாயகியாக கீர்த்திசுரேஷ் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பல நடிகர்களை நடிக்கவைப்பது அந்தப்படத்தைப் பல மொழிகளில் வெளியிடுவது என்கிற வியாபார உத்தி மிகவும் பாதுகாப்பாக இருப்பதால் மணிரத்னம் இதைக் கடைபிடிக்கிறார் என்று சொல்கிறார்கள்.

மேலும், இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் இருப்பதால் படத்தை தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் இந்தியிலும் டப் செய்து வெளியிடத் திட்டமிடுகிறார்களாம்.