அரசியல் வேலைகளை கொஞ்சம் ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு, நாம் தமிழர் சீமான் அதிரடியாக சினிமாவில் இறங்கப்போகிறார் என்று சில வாரங்களுக்கு முன்பு நமது இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அச்செய்தியை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக வரிசையாகப் படங்களில் கமிட் ஆகி வருகிறார் சீமான்.

இந்நிலையில் நடித்தால் மட்டும் போதாது என்ற என்ற எண்ணத்தில் விரைவிலேயே அவர் ஒரு படம் இயக்கவிருப்பதாகவும் அப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் நடமாடுகின்றன.

2008ல் வெளிவந்த ‘வாழ்த்துகள்’ படத்துக்குப் பின்னர் சீமான் படங்களே இயக்கவில்லை. விஜயை வைத்து அவர் இயக்குவதாக இருந்த ‘பகலவன்’ படம் வெறும் அறிவிப்போடு நின்றுவிட்டது. அடுத்து முழுநேர அரசியல்வாதியாக இயங்கி வந்த சீமான் ரஜினி,கமலின் அரசியல் வரவால் டயர்டாகி மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத சிம்பு- சீமான் காம்பினேஷன் பற்றி கருத்துத் தெரிவிக்கும் சில சினிமா புள்ளிகள் சீமான் ஒரு கோபக்காரர். சிம்புவோ தான் அறிமுகமான காலத்திலிருந்து இன்றுவரை படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வராமல் சொதப்புபவர். இவர்களுக்குள் எப்படி செட் ஆகும்’ என்று சந்தேகம் கிளப்புகிறார்கள்.