நடிகர் சிம்பு கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் எடையை குறிப்பதற்காக, லண்டன் சென்று சிகிச்சை எடுத்து விட்டு திரும்பினார். இதன் பின்னர் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், அனைவரும் எதிர்பார்த்த 'மாநாடு' திரைப்படத்தில் நடிக்கவில்லை.

இந்நிலையில், கார்த்திகை மாதம் மாலை போட்டு ஐயப்பன் கோவிலுக்கு செல்ல விரதம் எடுக்க துவங்கினார். கடந்த வாரம் நல்லபடியாக மலைக்கு சென்று திரும்பிய சிம்பு, தற்போது தீவிரமாக பட வேலைகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

அந்த வகையில் தற்போது, ஸ்லிம்மாக, நியூ லுக்கில் சிம்பு இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

இதில் இருந்ததே, அடுத்ததாக இவர் நடிப்பில் உருவாக உள்ள 'மாநாடு' படத்திற்கு சிம்பு தயார் ஆகி விட்டார் என தெரிகிறது. மேலும் இந்த லுக்கில் சிம்பு செம்ம மாஸாக உள்ளார் என ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.