நடிகர் விஷால் நடித்து வரும் 'அயோக்யா' திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காட்சிகள் முடிவடைந்து விட்ட நிலையில், கடைசியாக படக்குழுவினர் எடுப்பதாக இருந்த ஒரே ஒரு குத்து பாடல் மட்டும் தான் மிச்சம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஒரு குத்துப்பாடலில் நடனம் ஆட, 'விக்ரம் வேதா' அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' ஆகிய படங்களில் நடித்து வரும்,  நடிகை  ஷராதா ஸ்ரீநாத்தை  ஒப்பந்தம் செய்திருந்தனர் படக்குழுவினர்.  

ஆனால் இவர் தற்போது 'நேர்கொண்ட பார்வை' உள்ளிட்ட  ஒருசில படங்களில் பிஸியாக நடித்து வருவதால் ஒப்புக்கொண்ட படி, நடனமாடாமல் இழுக்க அடித்து, சீன் போட்டதாக கூறப்படுகிது. 

இதனையடுத்து 'அயோக்யா' படக்குழுவினர் அதிரடியாக நடிகை ஷராதாவுக்கு பதிலாக, சிம்பு நடித்த 'சிலபாட்டம்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த  நடிகை சனாகானை ஒப்பந்தம் சதம்மில்லாம் கமிட் செய்து படப்பிடிப்பை துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த பாடலின் வரிகள் மற்றும் பாடலின் இசையை கேட்டு விட்டு உடனடியாக, இந்த பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டுள்ளார்.  இந்த பாடலின் படப்பிடிப்பு இந்த வாரத்திற்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.