இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த மாநாடு படத்தின் ஷூட்டிங் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் சிம்பு படக்குழுவுக்கு  சூப்பர் பரிசு ஒன்றையும் கொடுத்து சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த மாநாடு படத்தின் ஷூட்டிங் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் சிம்புபடக்குழுவுக்கு சூப்பர் பரிசு ஒன்றையும் கொடுத்து சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சிம்பு நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'மாநாடு' படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் இறுதி கட்ட நிலையில் இருந்த நிலையில், நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

இதனை நடிகர் சிம்பு, படக்குழுவினருடன் கேக் வெட்டி பிரமாண்டமாக கொண்டாடி மகிழ்ந்தார். மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட, மாநாடு படக்குழுவில் பணியாற்றிய சுமார் 300 பேருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது. மீதம் உள்ள பணிகள் நிறைவடைந்து விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை கைப்பற்ற சில ஓடிடி தளங்கள் முயல்வதாக செய்திகள் வெளியான நிலையில் இதற்க்கு பதிலளித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கண்டிப்பாக படம் திரையரங்கில் தான் வெளியாகும் என தெரிவித்தார்.

இப்படத்தில் சிம்புவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.