வெங்கட் பிரபு இயக்கத்தில் "மாநாடு" என்ற படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. வி ஹவுஸ் புரொடக்‌ஷன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கவிருந்த அந்தப் படத்தில், கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிம்புவின் கால்ஷூட்டிற்காக காத்திருந்த படக்குழு, அவரை படத்தில் இருந்து நீக்கியதாக அறிவித்தது. அதற்கு போட்டியாக "மகாமாநாடு" என்ற படத்தை இயக்கி நடிக்க உள்ளதாக சிம்பு அறிவித்தார். 

இதையடுத்து தயாரிப்பாளருக்கும், சிம்புவிற்கும் இடையேயான பிரச்சனை சமாதானம் ஆனதை அடுத்து, "மாநாடு" படத்திற்காக மாலை போட்டு விரதம் இருந்தார் சிம்பு. 40 நாட்கள் விரதத்திற்கு பிறகு சபரிமலை போய்த் திரும்பிய சிம்பு, தற்போது "மாநாடு" படத்திற்காக வெறித்தனமாக உடல் பயிற்சி செய்து வருகிறார். அந்த வீடியோ கூட சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் ராகவா லாரன்ஸை வைத்து வெங்கட் பிரபு படம் இயக்க உள்ளதாகவும், அதனால் "மாநாடு" படத்தின் ஷூட்டிங் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரவின. அதாவது "மாநாடு" ஷூட்டிங்கைமீண்டும் தொடங்குவதற்காக வெங்கட் பிரபு மீண்டும் கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
அதன் பின்னர் ஜனவரி மாதம் 3வது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்புவை திரையில் பார்ப்பதற்காக STR ஃபேன்ஸ் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.