இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் முழுக்க முழுக்க கிராமத்து கதையான ஈஸ்வரன் படத்தில் சிம்பு நடித்து வந்தார். திண்டுக்கல்லில் கடந்த சில வாரங்களாக ஷூட்டிங் நடந்து வந்த நிலையில், முழு மூச்சுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிம்பு நடித்து முடித்துவிட்டார். படத்தின் டிரெய்லரை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்து விட்டதால், தற்போது படக்குழு  போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படு தீவிரமாக இறங்கியுள்ளனர். இவர் தன்னுடைய டப்பிங் பணியையும் சிம்பு முடித்துக் கொடுத்துவிட்டார்.

 

பொங்கல் விருந்தாக ஈஸ்வரன் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது முழு வீச்சுடன் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் சிம்பு, ஈஸ்வரன் படத்தை முடித்த கையோடு ரேஸ்ட் கூட எடுக்காமல் மாநாடு ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். 

இதையும் படிங்க|: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவா இது?... சத்தமே இல்லாமல் நடத்தியுள்ள ஹாட் போட்டோ ஷூட்...!

ஏற்கனவே சென்னை, ஐதராபாத்தில் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து கொரோனா பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாண்டியில் மூன்றாம் கட்ட ஷூட்டிங்கை படக்குழு தொடங்கியுள்ளது. 
திரையுலகிலேயே முதன் முறையாக சித்த மருத்துவக்குழுவுடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் மாநாடு படம் குறித்து பதிவிட்டுள்ளார். நாளை காலை 9.09 மணிக்கு, மாநாடு படம் பற்றிய ஸ்பெஷல் அறிவிப்பு வெளியாகும் என அவர் பதிவிட்டுள்ளார். இத்துடன் Get Ready STR Fans என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.