​சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 14ம் தேதி வெளியாகியுள்ளது. கிட்டதட்ட தமிழகம் முழுவதும் 400 தியேட்டர்களில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவைப் பொறுத்து திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

 

இதையும் படிங்க: சொட்ட சொட்ட மழையில் நனைந்த படி... ஈரத்துணியுடன் அதுல்யா நடத்திய போட்டோ ஷூட் அதகளம்...!

ஒரே ஷெட்டியூலில் 32 நாட்களில் ஈஸ்வரன் பட ஷூட்டிங்கை முடித்துவிட்ட சிம்பு, தற்போது மாநாடு பட வேலைகளில் பிசியாக இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் இஸ்லாமிய இளைஞராக சிம்பு நடித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் இந்த படத்தில் இருந்து இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின. அதில் இஸ்லாமிய இளைஞரான சிம்புவின் நெற்றில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து ரத்தம் சொட்ட, சொட்ட தொழுகை செய்யும் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க: தோழி யாஷிகாவையே ஓரங்கட்டிய ஐஸ்வர்யா தத்தா... புதுவித புசு புசு உடையில் கண்கூச வைக்கும் உச்சகட்ட கவர்ச்சி...!

பொங்கல் விருந்தாக ஈஸ்வரன் திரைக்கு வர உள்ள நிலையில், மாநாடு படத்திலும் ஏதாவது ஸ்பெஷல் அறிவிப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்போது மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் சூப்பரான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் திருநாளான ஜனவரி 14ம் தேதி மாலை 04:05 மணிக்கு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என அறிவித்துள்ளார். இதையடுத்து சோசியல் மீடியாவில் #Maanaadu ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.