சிம்பு ஒரு சிறந்த , நடிகர், பாடகர், நடன இயக்குனர் என பல்வேறு துறைகளிலும் தனது திறமையை நிருபித்து காட்டியவர்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுத்துள்ளது.

தற்போது சிம்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், AAA படத்தில் நடித்து வருகிறார் , இந்த படத்தில் 3 தோற்றத்தில் சிம்பு வருவதால் ரசிகர்கள் இந்த படத்திற்கு வெயிட்டிங்.

இந்நிலையில் அடுத்ததாக, இசையமைப்பாளராக அறிமுகம் ஆகா உள்ளதாக தெருவிதுள்ளர்.

நடிகரும், இயக்குனருமான வி.டிவி. கணேஷ் சந்தானத்தை வைத்து இயக்க உள்ள 'சக்கபோடுபோடு ராஜா' படத்தில் தான் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகம் ஆகா உள்ளாராம்.

மேலும் இந்த படத்தில் சந்தானதிர்காக தான் இசையமைக்க உள்ளதாகவும், இதற்கு உங்களில் அன்பும் ஆதரவும் வேண்டும் என கூறியுள்ளார் சிம்பு.