simbu is the gentile man support ajith movie director
நடிகர் சிம்பு குறித்துப் பரவும் சர்ச்சைகளுக்கு மட்டும் எப்போதும் பஞ்சமே இருந்தது இல்லை, அந்த அளவிற்கு... அவரை சர்ச்சைகள் மிகவும் பிரபலப் படுத்தியுள்ளன.
சிம்பு எப்போதுமே, நடிப்பு, நடனம் என எதைக் கொடுத்தாலும் பின்னி எடுத்து விடுவார் என்பது ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். கடந்த ஒரு வருடமாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த சிம்புவிற்கு தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து ரெட் கார்டு போடும் அளவிற்கு பிரச்சனை வளர்ந்துள்ளது.

மேலும் 'AAA' படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் படத்தின் தோல்விக்கு முக்கியக் காரணம் சிம்பு என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் அஜித்தை வைத்து முகவரி, சிம்புவை வைத்து தொட்டி ஜெயா ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் துரை தற்போது சிம்பு பற்றி பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், நடிகர் சிம்புடன் பணியாற்றியபோது தனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் என்றும், ஒரு முறை கூட என்னுடைய கதையில்... அவர் மற்றம் செய்தது கிடையாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவரைப் போல் ஒரு மிகச் சிறந்த நடிகரையும் மனிதனையும் பார்க்கமுடியாது, அதே போல் பலர் சிம்பு படப் பிடிப்புக்கு பல மணி நேரத்திற்குப் பிறகு தான் வருவார் என கூறுகின்றனர், அனால் என்னுடைய படபிடிப்பில் அவர் ஒரு முறை கூட அப்படி நடந்துகொண்டதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த வீடியோவை யாருடைய வற்புறுத்தலின் பெயரிலும் நான் வெளியிடவில்லை, எனக்குத்தெரிந்த, என்னுடன் பணியாற்றிய சிறந்த மனிதனுக்கு பிரச்சனை என்றால் என்னால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது அதனால்தான் இதனை வெளியிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
