பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் தாக்கம் அவ்வளவு எளிதில் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காது. முதல் சீசனை விட இரண்டாவது சீசன் டல் அடித்தாலும், இந்த நிகழ்ச்சி சற்று பிரச்சனைகளோடு போக காரணமாக இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

இவர் புதிய படங்களில் கமிட் ஆவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் முதல் சீசன் போட்டியாளர்களை காட்டிலும் இரண்டாவது சீசன் போட்டியாளர்களுக்கு பெரிதாக எந்த படத்திலும் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே ஒரு பேச்சும் அடிப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா தத்தா தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது இவருடைய  பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என எண்ணிய ஐஸ்வர்யாவின் நண்பரான மகத், சிம்பு மற்றும் அனிரூத் ஆகியோருடன் ஐஸ்வர்யாவின் வீட்டிற்கே சென்று கேக் வெட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஏற்கனவே, மகத் மூலம் சிம்புவுக்கு நன்கு அறிமுகமான ஐஸ்வர்யாவை அடுத்த படத்தில் நடிக்க வைக்க சிம்பு முயற்சித்து வருவதாக தகவலை, தொடர்ந்து இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் அதை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.