கமலுக்கு பதில் பிக்பாஸ் அல்டிமேட்டில் களமிறங்கியுள்ள சிம்புவை தாரை தப்பட்டையுடன் பிக்பாஸ் நிர்வாகம் அழைத்து செல்லும் ப்ரோமோ வெளியாகியுள்ளது...
பிக்பாஸ் நிகழ்ச்சியானது, நெதர்லாந் நாட்டின் 'பிக் பிரதர்' நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இது இந்தியாவில் முதலில் ஹிந்தியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் என்று பல மொழிகளில் நடத்தப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது.

தற்போது, தமிழில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் நம்பர் 1 தொலைக்காட்சி நிகழ்ச்சியாக பிக்பாஸ் உள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது வழங்கப்படும் பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

அதுமட்டுமின்றி தற்போது நடந்து வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் அவர் தான் தொகுத்து வழங்கி வந்தார். கடந்த 3 வாரங்களாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், கடந்த வாரத்துடன் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அவரின் இந்த முடிவுக்கு காரணம் பணிச்சுமை தான். இடைவிடாத படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகள் என தொடர்ந்து பிசியாக இயங்கி வருவதால், பிக்பாஸில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கமல் (Kamal) அறிவித்தார். கமல் திடீரென விலகியதால் அவருக்கு பதில் யார் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

இதையடுத்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலுக்கு பதில் சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், கமலுக்கு பதில் பிக்பாஸ் அல்டிமேட்டில் களமிறங்கியுள்ள சிம்புவை தாரை தப்பட்டையுடன் பிக்பாஸ் நிர்வாகம் அழைத்து செல்லும் ப்ரோமோ வெளியாகியுள்ளது...
