சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது வந்தா ராஜாவாத்தான் வருவேன் படம். ரம்யா கிருஷ்ணன், பிரபு, நாசர், கேதரின் தெரசா, மேகா ஆகாஷ் மற்றும் மகத் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

காமெடிக்காக,"யோகி பாபு, விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர்" உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்படம் ரிலீசாகியுள்ள இந்த படத்திற்கு சிம்பு கண்ணீர்விட்டு அண்டா பால் கேட்டதால், சிம்பு ரசிகர்கள் அவரது கட் அவுட்டிற்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றி  பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடி வருகின்றனர். 

இப்படத்தை தமிழகம் முழுவதும் உள்ள சிம்பு ரசிகர்கள் பார்த்து வரும் வேளையில், படக்குழுவினர் மற்றும் ரசிகர்களின் அதிர்ச்சிக்கு இப்படத்தை தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் லீக் செய்தது. அதுவும் 
HD தரத்தில் முந்தைய படங்களை மிஞ்சும் அளவிற்கு பக்கா குவாலிட்டியில் ரிலீஸ் செய்திருப்பதால் படக்குழுவினர் உட்பட சிம்பு ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர்.