சமீபத்தில், நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதில் “நான் சமீபத்தில் எனக்கு கட் அவுட் பாலபிஷேகம் எல்லாம் வேண்டாம் என்று ரசிகர்களிடம் கூறினேன். அதற்கு சிலர் எனக்கெல்லாம் அந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா? இவர் எதுக்கு இதெல்லாம் பேசுறாரு. அவருக்கு இருக்குற 2,3 ரசிகருக்கு இது தேவையா? ஒரு தப்பு பண்ணுனா திருத்திக்கனும்.

அதனால, அந்த 2,3 ரசிகர்களுக்கு நான் சொல்லும் அன்புக்கட்டளை என்னனா? இதுவரைக்கும் நீங்க வைக்காத அளவுக்கு பிளெக்ஸ், கட் அவுட் வைக்கிறீங்க. பால் எல்லாம் பாக்கெட்டில் பத்தாது, அண்டாவில் கொண்டு வந்து ஊற்ற வேண்டும். வேற லெவலில் செய்றீங்க. இதுதான் நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.” என்று பேசியுள்ளார். 

"

தனது ரசிகர்களுக்கு வந்தா ராஜாவாகத் தான் வருவேன் படத்திற்கு வந்தா அண்டாவோட தான் வரணும் என கட்டளையிட்டதை  போறவன் வரவனெல்லாம் கழுவி கழுவி ஊத்தும் மேட்டரில் பதிலடி கொடுக்கமுடியாமல் திணறி  வந்தது யங் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் பட்டாளம்.

அண்டாவோட  வந்து கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யணும்னு சொன்ன ஒரு மணி நேரத்திலேயே சிம்புவுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டனம், மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவோம் என எச்சரிக்கை வேற விட்டு கதிகலங்க வைத்தனர். இதில் உச்சகட்ட அவமானம் என்னன்னா?  "வந்தா ராஜாவா தான் வருவேன்" படம் வெளியாகும் நாளில் பால் முகவர்கள் கடைகளிலிருந்து சிம்பு ரசிகர்கள் பால் திருடப்படாமல் தடுக்க காவல்துறை பாதுகாப்பளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சியில் சிம்புவின் ரசிகர்கள் அவரது பேனருக்கு அண்டாவில் பால் அபிஷேகம் செய்து அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். அதில், “திருச்சி ரசிகர்களின் அண்டாவில் பால் ஆரம்பம். இது சும்மாதான்.  வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்தோட ரிலீஸ் பிப்ரவரி 1 தான் பார்க்க போரிங்க சிம்பு ரசிகர் ஆட்டத்தை” என்ற வாக்கியமும் இடம்பெற்றுள்ளது.