நடிகர் சிம்பு என்றாலே சர்ச்சை தான். ஒன்று காதல் சர்ச்சையில் சிக்குவார். இல்லை என்றால் படங்களில், பாடல்களில் ஏதேனும் வார்த்தைகளால் சிக்குவார். அவை எல்லாவற்றையும் சகஜமாக எடுத்துக்கொண்டவர் சிம்பு. ஆனால் சமீபகாலமாக அவர் சந்தித்து வந்த பிரச்சனைகள். அவரது திரையுலக வாழ்வையே வெகுவாக பாதித்தது. இதனால் அவர் மனதளவில் நொந்து போயிருந்தார்.

என்ன தான் அவர் மீது சர்ச்சைகள் எழுந்தாலும் அவர் ரசிகர்கள் அவரை ஒரு போதும் விட்டு கொடுத்ததில்லை. இதனாலேயே அவர் தனது மனக்கஷ்டத்தில் இருந்து தற்போது மீண்டு வந்திருக்கிறார். மேலும் சிம்புவின் திரையுலக வாழ்க்கை இப்போது  மறுபடியும் ஏறுமுகமாக தொடங்கிவிட்டது.

சமீபத்தில் கூட இவர் மணிரத்தினம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏற்கனவே செம ஹிட் கொடுத்த ”விண்ணை தாண்டி வருவாயா” திரைப்படத்தின் அடுத்த பாகத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் சிம்பு ஒரு பிரபலமான விருதுவழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அப்போது அவரிடம் நீங்கள் யாரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மூன்று நடிகைகளின் பெயர்கள் ஆப்ஷனாகவும் வழங்கப்பட்டது. அப்போது பதிலளித்த சிம்பு தனக்கு திருமணம் செய்யவோ, காதல் செய்யவோ, அனுஷ்கா தான் ஒரே சாய்ஸ் என தெரிவித்த்ருக்கிறார். அவர் அவ்வளவு தூரம் அனுஷ்காவிற்கு ரசிகராம்.