இயக்குநர் சுசீந்திரனிடம் கூறிய கதையை கேட்ட உடனேயே ஈஸ்வரன் படத்திற்கு ஓ.கோ. சொன்னது மட்டும் இல்லாமல், அதே விறுவிறுப்போடு இந்த படத்தை ஒரே கட்டத்தில் நடித்தும் முடித்து விட்டார் சிம்பு. பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்பு தனது உடல் எடையைக் கணிசமாக குறைத்து பழைய ஸ்டைலிஷ் சிம்பு லுக்கிற்கு  மாறியுள்ளார். இவரது போஸ்டர் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளியது. 

ஈஸ்வரன் படத்திற்கு டப்பிங் பேசி முடித்த கையோடு சிம்பு மாநாடு படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார். மாநாடு படத்தில் நடித்தாலும் ஈஸ்வரன் குறித்து அவ்வப்போது அப்டேட் வெளியிட்டு வருகிறார் சிம்பு. மேலும் தன் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ள 'ஈஸ்வரன்' படத்தின் பாடல்கள் ஜனவரி இரண்டாம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தமன் இசையில், பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ள இந்த படத்தின் பாடல்களுக்கு ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்புவுக்கு ஜோடியாக, பூமி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நிதி அகர்வால் நடித்துள்ளார். முக்கிய பாரதிராஜா உள்பட பலர் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.