இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், சிம்பு நடிக்க இருந்த 46 ஆவது படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும், இந்த படத்தின் பெயர் 'ஈஸ்வரன்' என்பது விஜயதசமியை முன்னிட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம்ம ஸ்லிம்மாக மாறி மிரட்டியுள்ளார் சிம்பு.

மேலும் செய்திகள்: வருங்கால கணவரை கட்டி அணைத்தபடி காதல் செய்யும் காஜல்..! சமூக வலைத்தளத்தை சூடாக்கிய புகைப்படம்..!
 

நடிகர் சிம்பு கடந்த ஓரிரு வாரத்திற்கு முன், லாக் டவுன் நேரத்தில் கடின உடல் பயிற்சிகள் செய்து எடையை குறைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுருந்தார். இந்த வீடியோ, சிம்பு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்ட நிலையில், இந்த வீடியோவில் சிம்புவின் தற்போதைய தோற்றத்தை முழுமையாக வெளிக்காட்டாமல் சஸ்பென்ஸாக வைத்திருந்தார்.

சிம்பு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், கிராமத்து கதையம்சம் கொண்ட படத்தில் நடடிப்பதற்காக தான் தன்னுடையை எடையை குறைத்தார். மேலும் இந்த படத்தின் ஷூட்டிங்கிலும் சிம்பு தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்: ஹீரோயின்களை மிஞ்சிய விஜய் டிவி சூப்பர் சிங்கர் 'ராஜலக்ஷ்மி'! பொறாமைப்பட வைக்கும் அழகில் போட்டோ ஷூட்!
 

இந்நிலையில், இந்த படத்தின் பெயர் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ளது. 'ஈஸ்வரன்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் சிம்பு கையில் பாம்பை பிடித்தபடி மிரட்டியுள்ளார். 

மேலும் செய்திகள்: 44 வயதிலும் சீரியல் ஹீரோயின்..! போட்டோ ஷூட்டில் அசத்தும் 'அழகு' நாயகி சுருதிராஜ்..!
 

மாதவன் மீடியா தயாரிக்கும் இந்த படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக முதல் முறையாக ஜோடி சேருகிறார், ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்தில் நடித்த நிதி அகர்வால். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் இமையம் பாரதி ராஜா நடிக்க உள்ளார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'ஈஸ்வரன்' படத்தின் மோஷன் போஸ்டர் இதோ...