வெங்கட் பிரபு இயக்கத்தில் ரசிகர்கள் பல நாட்களாக ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படம் “மாநாடு”. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளதாலும், மாங்காத்தா இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கம் என்பதாலு சிம்பு ரசிகர்கள் மாநாடு படத்தை காண வேற லெவல் வெயிட்டிங்கில் உள்ளனர். ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக ஷூட்டிங் ஆரம்பித்த வேகத்திலேயே தற்காலிகமாக நின்று போனது. 

 

இதையும் படிங்க: காதல் கணவருக்கு லிப் லாக்... படு ரொமான்ஸ் போட்டோவை வெளியிட்ட காஜல் அகர்வால்...!

தற்போது மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் ஷூட்டிங் வேலைகள் மீண்டும் நடந்து வருகின்றன. ஆனால் மாநாடு பட ஷூட்டிங் நவம்பர் இரண்டாம் வாரத்தில் தான் தொடங்க உள்ளது. அந்த கேப்பில் சுசீந்திரன் இயக்க உள்ள கிராமத்து கதையில் நடிக்க சிம்பு ஒப்புக்கொண்டார். முழுக்க முழுக்க கிராமத்து இளைஞராக சிம்பு நடித்திருக்கிறார். அதற்காக கடும் உடற்பயிற்சிகளை எல்லாம் செய்து தனது உடல் எடையை கூட 100 கிலோவிலிருந்து 70 ஆக குறைத்தார் சிம்பு. 

சிம்புவின் சின்சியாரிட்டியை பார்த்த சுசீந்திரன் ஒரே மாதத்தில் ஷூட்டிங்கை முடித்து பொங்கலுக்கு வெளியிடுவதாக அறிவித்தார். அப்போது என்னது சிம்புவை வைத்து ஒரு மாசத்தில படத்தையே முடிக்க போறீங்களா? ஆசை இருக்கலாம் ஆனால் உங்களுக்கு பேராசை சார்!... என சுசீந்திரனை சோசியல் மீடியாவில் சிம்பு ஹேட்டர்ஸ் கலாய்த்தனர்.

 

இதையும் படிங்க: ‘லோ நெக்’ உடையில் படுமோசமாக போஸ் கொடுத்த நிவேதா தாமஸ்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

ஆனால் தன்னைப் பற்றி விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலளிக்காத சிம்பு, தேவையில்லாமல் வாயை எல்லாம் ஒரே நேரத்தில் மூடவைக்கும் படி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வந்த ஈஸ்வரன் படத்தின் ஓட்டுமொத்த ஷூட்டிங்கும் இன்றுடன் நிறைவடைந்துவிட்டதாம். அதுமட்டுமல்ல தீபாவளி ட்ரீட்டாக டீசரை வெளியிட உள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் சிம்பு. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் ஒரு பக்கம் சந்தோஷத்தில் துள்ளி குதிக்க... ஓவராய் வாய் பேசியவர்களோ ஆச்சர்யத்தில் வாயடைத்து போய்விட்டார்களாம்.