simbu demontasation song issue

நடிகர் சிம்பு 'பீப்' பாடல் பிரச்சனைக்குப் பிறகு எந்த ஒரு பிரச்சனைக்கும் போகாமல்தான் இருந்தார். மேலும் இவருக்கு எப்படியும் இந்த வருடம் திருமணத்தை முடித்து விட வேண்டும் என இவருடைய பெற்றோர் பெண் பார்க்கும் படலத்தில் மிகவும் தீவிரமாக இருந்தனர்.

இந்நிலையில் தற்போது மற்றொரு பிரச்சனை இவருக்கு மீண்டும் ஒரு பாடல் மூலமே வந்துள்ளது. இதனால் மீண்டும் அவருடைய பெற்றோர் இவர் பாடியுள்ள 'பணமதிப்பிழப்பு' பாடலால் என்ன பிரச்சனை வருமோ என்ற பயத்தில் உள்ளனர்.

மத்திய அரசுக்கு எதிராக இவர் பாடியுள்ள பாடலுக்கு தற்போது அரசியல் கட்சிகளின் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அவருடைய வீட்டில் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு இவர் பாடிய 'பீப்' பாடலுக்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பினாலும் இப்போது பாடியுள்ள பாடலுக்கு பலர் ஆதரவு கொடுத்துள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக இவருடைய பாடல் பட்டையை கிளப்பி வருவதால் எப்போது வேண்டுமானாலும் இவர் வீட்டிற்கும் ரெய்டு வரலாம் என சமூகவலைத்தளத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.