'பத்து தல' திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவலை தற்போது படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் சிம்பு ஏ ஜி ஆர் என்கிற கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல' இந்த படத்தை, சூர்யா - ஜோதிகா நடித்த 'சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கிய இயக்குனர் ஒப்பிலி என் கிருஷ்ணா இயக்கியுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கி உள்ள இப்படத்தின் ஆடியோ லான்ச் குறித்த தகவல் தற்போது வெளியாகி, சிம்பு ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
மணல் மாஃபியாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் 'பத்து தல'. இப்படத்தில் மிக முக்கிய கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு. மார்ச் 30ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் புரமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வரும் நிலையில், நேற்று இப்படத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில் அவருடைய மகன் அமீன் பாடியுள்ள பிரமோஷன் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதேபோல் இப்படத்தின் டீசருக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது. சிம்புவை தொடர்ந்து மிக முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் டி ஜே அருணாச்சலம், கௌதம் மேனன், போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி, 'பத்து தல' படத்தின் ஆடியோ லான்ச், மார்ச் 18 ஆம் தேதி 5 மணி அளவில் 'நேரு இண்டோர் ஸ்டேடியத்தில்' நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சிம்புவின் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
