Simbu AAA team members are so happy
'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் அனைத்து விநியோக உரிமைகளும் விற்றுவிட்டதால், சிம்பு மற்றும் தயாரிப்பாளர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்.
த்ரிஷா இல்லனா நயன்தாரா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, ஷ்ரேயா, தமன்னா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வரும் படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. மூன்று விதமான கெட்டப்பில் அசத்தியுள்ளார் சிம்பு. இதில் 'மதுரை மைக்கேல்' மற்றும் 'அஸ்வின் தாத்தா' ஆகியவற்றின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. இப்படத்தை 2 பாகங்களாக வெளியிட திட்டமிட்டு, முதல் பாகம் ஜூன் 23-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்.

கோயம்புத்தூர் உரிமையை தவிர, இதர உரிமைகள் அனைத்துமே விற்றுவிட்டதால் தயாரிப்பாளர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார். நாளை முதல் சென்னையில் சிம்புவின் அறிமுகப் பாடல் படப்பிடிப்பை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது இதனையடுத்து
'மதுரை மைக்கேல்' மற்றும் 'அஸ்வின் தாத்தா' ஆகிய தோற்றங்கள் மட்டும் முதல் பாகத்தில் இடம்பெறும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
