simbu aaa movie shooting next schedule for bankong

நடிகர் சிம்பு இப்போது இயக்குனர் ஆதிக்கரவிச்சந்திரன் இயக்கத்தில் மூன்று வேடங்களில் நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. 

மதுரை மைக்கேல் மற்றும் அஸ்வின் தாதா கேரக்டர்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறாத நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

மூன்றாவது கேரக்டரின் படப்பிடிப்பிற்காக வரும் 16ஆம் தேதி பாங்காங் செல்ல திட்டமிட்டிருக்கிறார்களாம் படக்குழுவினர்.

சிம்புவிற்கு கோடியாக ஏற்கனவே தமன்னா, ஸ்ரேயா, அகியோர் நடித்துள்ளனர், மேலும் மூன்றாவது வேடத்தில் நடிக்கும் சிம்புவிற்கு யார் ஜோடியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி இருக்கிறதா...? இல்லையா...? என்கிற தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.