அடுத்தடுத்து பிசியாகும் சிம்பு... 48வது படம் குறித்து நாளை வெளியாகும் லேட்டஸ்ட் அப்டேட்!!
நடிகர் சிம்பு நடிக்க உள்ள 48 ஆவது படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் நாளை வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம், அதிகார பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
நடிகர் சிம்பு நடிக்க உள்ள 48 ஆவது படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் நாளை வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம், அதிகார பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
நடிகர் சிம்பு, தன்னுடைய உடல் எடையை குறித்து சுசீந்திரன் இயக்கத்தில் நடித்த 'ஈஸ்வரன்' படத்திற்கு பின், அடுத்தடுத்து பல படங்களில் நடிப்பதில் பிசியாகி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நடித்து முடித்துள்ள 'மஹா' மற்றும் 'மாநாடு' ஆகிய இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில், 'மாநாடு' படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாராக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். மேலும் விரைவில், 'மஹா' ரிலீஸ் குறித்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தொடர்ந்து, தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மிகவும் ஆர்வமாக நடித்து வருகிறார், அதே நேரத்தில் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் 'பத்து தல' படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. பல வருடங்களுக்கு பின், நடிகர் சிம்பு ஓய்வில்லாமல் நடித்து வருவதும், அவரது படங்கள் குறித்த அடுத்தடுத்த அப்டேட் வெளியாகி வருவதும் சிம்பு ரசிகர்களும் செம்ம கொண்டாட்டம் தான்.
இந்த படங்களை தொடர்ந்து, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், சிம்பு நடிக்க உள்ள 48வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பமே அசத்தல் என்பதற்கு ஏற்ற போல, மாஸான மோஷன் போஸ்டருடன் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதனை சிம்பு ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகிறார்கள்...