simbhu released video
எனக்கு 1000 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. அதனால் எனக்கு வாழ்க்கையில எந்த பிரச்சனையும் இல்லை. ரோபோ மாதிரி என்னால் வேலை செய்ய முடியாது என பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு.
சிம்பு படப்பிடிப்பிற்கு எப்போதும் லேட்டாக தான் வருவார் என்ற பிம்பத்தை தவிடு பொடியாக்கி, மணிரத்னம் இயக்கத்தில் 'செக்க சிவந்த வானம்' படத்தில் எந்த, பிரச்சனை இல்லாமல் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து பேசிய வெளியிட்டுள்ள வீடியோவில்... "செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்துவிட்டது. அதற்கு மணிரத்னமுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர் இயக்கத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. “அஞ்சலி” படம் பார்த்து இவருடைய இயக்கத்தில் நடிக்க வில்லை என நான் வருத்தப்பட்டேன். நம்மால் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க முடியாது என்று நினைத்தேன். ஆனால், மணிரத்னம் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். இந்த படத்தில் நடிக்க கூடாது என்று பல பிரச்சனைகள் தடைகள் வந்தாலும், அதையும் தாண்டி என் மேல் நம்பிக்கை வைத்தார்.

அவருக்கு பெரிய நன்றி. படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி. நான் வேலையை சரியாக செய்வதில்லை என்று எப்பவும் ஒரு குற்றச்சாட்டு இருந்துக் கொண்டே இருக்கிறது. நான் என் வேலையை மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்ததிலிருந்தே சினிமாவில தான் இருக்கிறேன். அதை விட்டா வேற எதுவும் தெரியாது. எனக்கு 1000 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. அதனால் எனக்கு வாழ்க்கையில எந்த பிரச்சனையும் இல்லை. ரோபோ மாதிரி என்னால் வேலை செய்ய முடியாது என இவ்வாறு கூறியுள்ளார்.
