பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கை, கன்னடத்திலும் இந்தியிலும் திரைப்படமாக தயாராகி வருகிறது. இவர் தனது சுயசரிதையை மலையாளத்தில் சமீபத்தில் ஏழுதி வெளியிட்டார். 

அதை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகிவருகிறது.

16 வயதில் குடும்ப கஷ்டத்தின் காரணமாக சினிமாவில் நடிக்க வந்த இவர் பின் மலையாள முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் படங்களை பின்னுக்கு தள்ளும் அளவிற்கு ஷகிலா படங்கள் வசூல் வாரிக்குவித்தது. இதானால் இவருக்கு எதிராக நடிகர்கள் பலர் போர்க்கொடி தூக்க ஆரம்பித்தனர். 

ஒரு நிலையில் இவர் மலையாள சினிமாவையே விட்டு ஒரேதடியாக விலகினார். மேலும் படங்களில் நடிக்க வாங்கிய முன் பணம் அனைத்தையும் தயாரிப்பாளர்களிடமே நேர்மையாக ஒப்படைத்தார். 

தற்போது ஷகிலாவின் வாழ்கை வரலாறு திரைப்படம் மும்புரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதில் இந்தி நடிகை 'ரிச்சா சதா' கதாநாயகியாக நடிக்கிறார்.

ஷகிலா வாழ்க்கை படத்தில் நடிப்பது குறித்து இவர் கூறுகையில்... "மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இந்த படத்தில் நான் நடிப்பதால் வித்யா பாலனுடன் என்னை ஒப்பிட்டு பேசுகின்றனர். காரணம் பிரபல கவர்ச்சி நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு படம் எடுத்தபோது அதில் கதாநாயகியா நடித்தவர் வித்யா பாலன். 

வித்யா பாலனுடன் தன்னை ஒப்பிட்டு பேசுவது சந்தோஷமாக இருந்தாலும், நிஜத்தில் சில்க் சுமிதா மற்றும் சகிலாவை ஒப்பிட முடியாது. இவர்கள் இருவருக்கும் கவர்ச்சி ஒன்று தான் ஒற்றுமையானதே தவிர வாழ்கை முற்றிலும் மாறுப்பட்டது என ரிச்சா சதா கூறியுள்ளார்.