சமீபத்தில் தான் நடிகர்  சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம்  'ஹீரோ' படத்தின் டைட்டில், விஜய் தேவரகொண்டாவின் படத்திற்கும் வைத்தது தொடர்பான ஒரு பஞ்சாயத்து வந்து ஓய்ந்தது.

இதை தொடர்ந்து இதோ போன்ற ஒரு பிரச்சனையில் மீண்டும் சிக்கியுள்ளது நடிகர் சிவகார்திகேன் நடித்து வரும் திரைப்படம். 

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படத்திற்கு 'எங்க வீட்டு பிள்ளை' என்ற டைட்டில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் ஏற்கனவே வெளிவந்தன.

இந்த நிலையில் 'எம்ஜிஆர்' நடித்த 'எங்க வீட்டு பிள்ளை' படத்தை தயாரித்த பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் 'எம்ஜிஆர்' நடித்த 'எங்க வீட்டு பிள்ளை' உள்பட தங்கள் நிறுவனம் தயாரித்த அனைத்து படங்களின் தலைப்புகளின் உரிமை இதுவரை எந்த நிறுவனங்களுக்கும் வழங்கப்படவில்லை என்றும், இதுகுறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே கடிதம் மூலம் தலைப்பு உரிமைக்காப்பு கோரி, தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் கொடுத்துள்ளதாகவும் தற்போது அதே நிலை தொடர்ந்து வருகிறது என்பதை இந்த உரிமைக்காப்பு கடிதம் மூலம் மீண்டும் நினைவூட்டுவதாகவும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து சிவகார்த்திகேயனின் படத்திற்கு  'எங்க வீட்டு பிள்ளை' டைட்டில் வைப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை முடிவிற்கு வருமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.