ஆபத்தான செல்பி எடுப்பதற்கு, விழுப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மும்பை போலீஸ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றை விமர்சித்துள்ளார் பிரபல நடிகர் சித்தார்த்.

பொதுமக்களின் நலன் கருதி, போலீசார் காவல் துறை சார்பாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தீயில் இருந்து ஒருவரை காப்பாற்றுவது எப்படி, முதலுதவி சிகிச்சை, கடலில் மாட்டிக்கொண்டவரை காப்பாற்றுவது என்கிற விழுப்புணர்வை அவ்வப்போது ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது இலைஞர்கள் மத்தியில் தலைவிரித்தாடும், செல்பி மோகத்தால் ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்பதை தவிர்க்கும் நோக்கத்தில், மும்பை போலீசார் முன்னெச்சரிக்கை எதையும் பதிவிடாமல், ஒருவர் மிக உயரிய கட்டிடத்தில் இருந்து விழும் வீடியோவை வெளியிட்டிருந்தனர். 

 

இதனைச் சுட்டிக்காட்டி நடிகர் சித்தார்த் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், இதுபோன்ற விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது நல்ல விஷயம் என்றாலும், ஒருவர் மேலே இருந்து குத்துக்கும் ஆபத்தான விடீயோவிற்கு, எந்த எச்சரிக்கை பதிவையும் போடாமல் வெளியிட்டதற்கு கண்டித்து பதிவு போட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.