வதந்திகளை ஒப்புக்கொள்ளும் சித்தார்த்.. இதயராணிக்கு பிறந்தநாள் வாழ்த்து
அதிதி ராவ் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்த சித்தர் தனது இதயராணிக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இவர்களின் உறவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகராக இருப்பவர் சித்தார். மாதவனின் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு வந்த இவருக்கு பாய்ஸ் படம் நல்ல ஆரம்பத்தை கொடுத்தது. சில படங்களில் இவர் காமியோவில் தோன்றியிருந்தாலும் தமிழில் இவருக்கு வரவேற்பை கொடுத்தது பாய்ஸ் படம் தான். இதையடுத்து தெலுங்கு, பாலிவுட் பக்கமும் சென்ற இவருக்கு அங்கும் நல்ல வரவேற்புகள் இருந்தது. தமிழில் 180, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, எனக்குள் ஒருவன், சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாகிவிட்டார். தற்போது இவர் இந்தியன் 2வில் ஒரு அங்கமாக இருக்கிறார்.
இதற்கிடையே சமூக பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசுவதின் மூலம் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் சித்தார்த். முன்னதாக 2003 ஆம் ஆண்டு மேகனா என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்தார்த் 2007 ஆம் ஆண்டு அவரைப் பிரிந்தார். தற்போது பிரபல நடிகை அதிதிராவுடன் இவர் உறவில் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்த ஜோடிகள் எந்த ஒப்புதலையும் தெரிவிக்காமல் தான் இருந்தனர்.
மேலும் செய்திகளுக்கு...உள்ளாடை தெரிய அமர்ந்து கண்களை கலங்கடிக்கும் திவ்யபாரதி...
மகா சமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் சித்தார்த்தும் அதிதீராவும் ஒன்றாக நடித்திருந்தனரே. அந்த படப்பிடிப்பு தளத்தில் தான் இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிதி ராவ் தனது 36 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதை ஒட்டி பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில் அதிதி ராவ் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்த சித்தர் தனது இதயராணிக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இவர்களின் உறவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.