பிரபல பாடகர் சித் ஸ்ரீராம், மணிரத்னம் தயாரிக்கும் படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தில் இவருக்கு முன்னர் ‘96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா ஒப்பந்தமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பிரபல பாடகர் சித் ஸ்ரீராம், மணிரத்னம் தயாரிக்கும் படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தில் இவருக்கு முன்னர் ‘96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா ஒப்பந்தமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழில் தள்ளிப் போகாதே.., மறுவார்த்தை பேச, குறும்பா, கண்ணான கண்ணே... உட்பட ஏராளமான ஹிட் பாடல்களைப் பாடியிருப்பவர் சித் ஸ்ரீராம். தமிழ் மட்டுமின்றி இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பாடல் பாடி அசத்தி வருகிறார். இவரின் குரல் தன்மைக்காகவே ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. 

இந்த நிலையில் இவர் அடுத்த படியாக இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ள படத்தில். ஆம்... மணிரத்னம் கதை, திரைக்கதையில் அவர் உதவியாளர் தனசேகரன் இயக்கும் படம், ’வானம் கொட்டட்டும்’. விக்ரம் பிரபு, மடோனா நடிக்கும் இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா உள்படப் பலர் நடிக்கின்றனர்.முதல் முறையாக இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக சித்ஸ்ரீராம் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சித் ஸ்ரீராமுக்கு முன்னர் இப்படத்துக்கு ‘96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். மணிரத்னம் நிறுவனம் பற்றி சரியாகத் தெரியாமல் சம்பளம் எதுவும் கேட்டிருப்பார்போல. அதனால் அவர் தூக்கப்பட்டு சித் ஸ்ரீராம் அறிமுகமாகிறார்.