திரைப்பிரபலங்கள் சிலரது வாரிசுகள் சினிமாவை மட்டும் தேர்வு செய்யாமல், அவர்களுக்கு பிடித்த வேறு துறையை தேர்வு செய்து சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் சத்யராஜின் பேரனும், சிபி சத்யராஜின் மகனுமான தீரன் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் விஜய்யின் மகள் திவ்யா சாஷா கூட அமெரிக்காவில் நடைபெற்ற பேட்மின்டன் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாண்டார். 

நவம்பர் 9, 10 தேதிகளில்  புனேவில் தேசிய அளவிலான டோக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிபி சத்யராஜின் மகன் தீரன், 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இந்த பெருமையான தருணத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சிபி ராஜ். 

 

மகன் தீரன் கழுத்தில் இரண்டு தங்க பதக்கங்களுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சிபிராஜ், எனது மகன் தீரன் புனேவில் நடந்த டேக்வாண்டோ சாம்பியன் ஷிப் 2019 போட்டியில் பங்கேற்று, இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பதை மிகுந்த மகிழ்ச்சி மற்றும் பெருமையுடன் பகிர்ந்துகொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவைக் கண்ட திரைப்பிரபலங்கள் பலரும் சிபிராஜுக்கும், அவரது மகனுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.