Roja Serial Sibbu: ரோஜா சீரியல் நாயகன் சிபு சூர்யன் திடீரென ரோஜா தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறார். 

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ’ரோஜா’. நாயகியாக பிரியங்கா நல்காரி, நாயகனான அர்ஜுன் ரோலில் சிபு சூர்யன், இவர்கள் இருவருக்கும் டப் கொடுக்கும் வகையில் வில்லியாக விஜே அக்‌ஷயா நடித்து வருகின்றனர். டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பெற்று வரும் சீரியலில் ரோஜா, அர்ஜுன் ஆகிய இருவருக்கும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். 

ரோஜா சீரியல்:

வீட்டு பெண்மணிகளின் பேராதரவோடு இந்த சீரியல் 100 எபிசோடுகளை கடந்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த சீரியலின் விறுவிறுப்புக்கு இதில் இருக்கும் ஒவ்வொரு நடிகர்களும் காரணம் தான். மேலும், இளசுகளை இந்த சீரியல் அதிகம் கவர்ந்துள்ளது. காரணம் இதில் பஞ்சமில்லாத ரொமான்ஸ் மற்றும் விறுவிறுப்பான, திரைக்கதை தான் என்று பலரும் கூறி வருகின்றனர்.

 மேலும் படிக்க....Nayan: என்னது..நயன்தாரா படத்தில் இல்லையா..? நெட்டிசன்களின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூப்பர் ஸ்டார்...

அர்ஜுன், ரோஜா ஜோடி:

 இந்நிலையில் தற்போது புதிய செய்தி என்னவென்றால், இந்த சீரியல் நாயகன் சிபு சூர்யன் திடீரென ரோஜா தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறார். இது தொடர்பான தகவலை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

 மேலும் படிக்க....Nayan: என்னது..நயன்தாரா படத்தில் இல்லையா..? நெட்டிசன்களின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூப்பர் ஸ்டார்...

சீரியலில் இருந்து விலகும் அர்ஜுன்:


அதில் அவர் "நான் ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன், வரும் ஆகஸ்ட் வரை மட்டுமே நடிப்பேன். என்னுடைய சீரியல் ப்ரொடக்ஷன் டீம் அனுமதி உடன் நான் மற்றொருபுதிய பயணத்தை தொடங்குகிறேன்.

அர்ஜுன் , உருக்கமான பதிவு 

மக்கள் இது நாள் வரை எனக்கு தந்த ஆதரவிற்கு "குட்பை'' சொல்வது அவ்வளவு சுலபம் அல்ல, ஆனால் சில நேரங்களில் அது மிக அவசியமான ஒன்றாகிறது. அர்ஜுன் கதாபாத்திரம் எனக்கு எப்போதும் ஸ்பெஷல், நான் மறக்கவே முடியாது. மீண்டும் உங்களை புதிய பயணத்துடன் சந்திக்கிறேன்'' என்று உருக்கத்துடன் குறிப்பிட்டு உள்ளார். 

 மேலும் படிக்க....Nayan: என்னது..நயன்தாரா படத்தில் இல்லையா..? நெட்டிசன்களின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூப்பர் ஸ்டார்...

View post on Instagram