Shyam Singha Roy trailer : இன்று மாலை 5 மணிக்கு  நானி நடித்துள்ள Shyam Singha Roy படத்திலிருந்து ட்ரெய்லர் வெளியாகவுள்ளது.

நானி, சாய் பல்லவி மற்றும் கிருத்தி ஷெட்டி நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷியாம் சிங்க ராய் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடித்துவிட்ட தயாரிப்பாளர்கள், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணியில் உள்ளனர். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் வெங்கட் போயன பள்ளியால் பிரமாண்ட பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய விருது பெற்ற க்ருதி மகேஷ் மற்றும் யாஷ் மாஸ்டர் படத்தின் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளனர். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, நவீன் நூலி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஷ்யாம் சிங்க ராய் படத்தில் ராகுல் ரவீந்திரன், முரளி சர்மா மற்றும் அபினவ் கோமதம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய அனைத்து தென் மொழிகளிலும் டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகிறது. இந்த படத்தின் தமிழ் மொழி டீசரை நடிகர் சிவகார்த்தியேகன் சமீபத்தில் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். சாய் பல்லவி, கிருத்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் என 3 ஹீரோயின்கள் நடித்துள்ள இந்த படத்தில் நானி இரட்டை வேடத்தில் வருவதாக தெரிகிறது.

முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த இந்த படத்திலிருந்து வெளியான டீசர் விறுவிறுப்பான bgm உடன் த்ரில்லராக அமைந்து ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.