தெலுங்கு பேசும் ‘தெறி’ பேபி... சமந்தாவா யாரு நடிக்கிறாங்க தெரியுமா?

விஜய், அட்லி அல்டிமேட் கூட்டணியில் உருவான திரைப்படம் ‘தெறி’, தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுகிறது. இந்த படத்தின் நாயகியாக முன்னணி நடிகை ஒருவர் களம் இறங்கியுள்ளார். 2016ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ திரைப்படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், ராஜேந்திரன், பேபி நைனிகா, மறைந்த இயக்குநர் மகேந்திரன், ராதிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. 

இந்நிலையில், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ள ‘தெறி’ திரைப்படத்தை, ‘டான் சீனு’, ‘பாடிகார்ட்’, ‘பலுபு’ உள்ளிட்ட மாஸ் படங்களின் இயக்குநரான கோபிசந்த் மலினேனி இயக்க உள்ளார். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவன தயாரிப்பாளர் மது தயாரிக்க உள்ள இந்த படத்தில் தெலுங்கின் முன்னணி ஹீரோவானா ரவி தேஜ் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ‘RT66’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

ரவி தேஜாவின் 66வது படமான இது, அவரது சினிமா கேரியரில் முக்கிய படமாக கருதப்படுகிறது. எனவே படத்தின் ஹீரோயினை தேர்வு செய்வதில் படக்குழு அதிக கவனம் செலுத்தி வந்தது. இந்நிலையில் ‘RT66’படத்தின் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ருதி ஏற்கெனவே கோபிசந்த் இயக்கிய பலுபு படத்தில் ரவி தேஜாவுடன் ஜோடி சேர்ந்தவர் என்பதால் டோலிவுட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது.