ஓராண்டாக படங்களில் நடிக்காமல் ஒதுக்கியிருந்த ஸ்ருதி ஹாசன் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். விஜய் சேதுபதியுடன் லாபம், இந்தியில் பவர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஹாலிவுட்டின் பிரம்மாண்ட கார்டூன் பட தயாரிப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி தயாரிக்கும் ப்ரோஸன் 2 படம் வரும் 22ம் தேதி வெளியாக உள்ளது. அந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமான எல்சா கதாபாத்திரத்தின் தமிழ் பதிப்பிற்கு ஸ்ருதி ஹாசன் குரல் கொடுத்துள்ளார். 

அப்பா கமல் ஹாசனின் பிறந்த நாள் மற்றும் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்றார் ஸ்ருதி ஹாசன். அப்போது கமல் ஹாசன் மற்றும் தங்கை அக்சரா ஹாசனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம வைரலானது. தமிழ் படங்களை விட தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் அதிக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது கவர்ச்சி போட்டோ ஷூட்களில் பங்கேற்கும் ஸ்ருதி ஹாசன், அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை திண்டாட வைப்பதில் கில்லாடி.

ஆனால் சமீபகாலமாக ஸ்ருதி ஹாசன் எவ்வித போட்டோ ஷூட்களையும் நடத்தாததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். தற்போது மீண்டும் களத்தில் குதித்துள்ள ஸ்ருதி ஹாசன், தனது பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். கறுப்பு நிற புடவையில் அழகான போஸ்களைக் கொண்ட 5 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஸ்ருதி தனது முதுகின் தோள்பட்டை அருகே தனது பெயரை பச்சை குத்தியிருப்பார். தனது பின்னழகை காட்டும் படியாக ஸ்ருதி ஹாசன் கொடுத்துள்ள அந்த போஸ் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. மேலும் இந்த போட்டோ ஷுட் மூலம் நீண்ட நாட்களுக்குப்பிறகு தனது ரசிகர்களுக்கு ஸ்ருதி ஹாசன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.