Shruti hassan get ready for marriage

இசையமைப்பாளராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கிய உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், இந்தி படத்தின் மூலம் நடிகையாக அவதாரம் எடுத்தார். இதையடுத்து தெலுங்கு, தமிழ் என முன்னணி நடிகையாக தொடர்ந்து நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல பாலிவுட்டில் கவர்ச்சியாக கன்னியாக நடித்து வந்தார்.

இதற்கிடையே, ஹாலிவுட் நாடக கலைஞர் ஒருவருடன் ஸ்ருதிக்கு காதல் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், ஸ்ருதியோ தாங்கள் நட்பாகத்தான் பழகுகிறோம், தங்களுக்குள் லவ்வும் இல்லை ஒன்றுமில்லை என்று கூறினார். இதனையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகவிருந்த ‘சங்கமித்ரா’ படத்தில் இருந்து ஸ்ருதி தீடிரென்று விலகினார்.

இந்த நிலையில், சினிமாவில் அறிமுகம் ஆனதில் இருந்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்த ஸ்ருதி, தற்போது குண்டாகிவிட்டார். உடற் பயிற்சி உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தாமல், தற்போது ஹாலிவுட் நாடக கலைஞருடன் சுற்றுவதில் தான் அவர் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. அதேபோல், பட வாய்ப்புகளையும் நிராகரித்து வரும் ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட போது, “ஸ்ருதியா இது!” என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு இஞ்சி இடுப்பழகியாக மாறிவிட்டாராம்.

இதற்கு காரணம், ஸ்ருதி ஹாசன் விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு, அவரது காதலரை கரம் பிடிக்க செய்துக்கொள்ள முடிவு எடுத்திருப்பது தான், என்று கூறப்படுகிறது.