அந்த பாடலுக்கு கமல் மகள் ஸ்ருதி ஹாசன் அவரது வெர்ஷனில் இசையமைத்து, பாடியுள்ளார். 

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் 1987ம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன். நடிப்பில் பல உச்சங்களை கடந்த கமலுக்கு நாயகன் திரைப்படம் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. சரண்யா, நாசர், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். அவரது இசையில் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. 



அதிலும் குறிப்பாக “தென்பாண்டி சீமையிலே” பாடல் கேட்போரை அப்படியே உருக வைத்துவிடும். அந்த பாடலுக்கு கமல் மகள் ஸ்ருதி ஹாசன் அவரது வெர்ஷனில் இசையமைத்து, பாடியுள்ளார். தனது 6 வயதில் இருந்தே இசை மீது தீராத காதல் கொண்டவர் ஸ்ருதி ஹாசன். இசையமைப்பாளர், பாடகி, நடிகை என பன்முக திறமைகளை கொண்டவர். இதுவரை 100க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். 



தற்போது ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடங்கும் ஸ்ருதி ஹாசன், சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கிறார். மற்ற நடிகைகளை போல வெறும் புகைப்படங்களை மட்டும் பதிவிடாமல் தனது பழைய மேடை நிகழ்ச்சிகளில் பாடிய பாடல்களையும் பதிவிட்டு வருகிறார். அதில் புதிய முயற்சியாக தான் தனது தந்தை நடித்த நாயகன் படத்தில் இடம் பெற்ற தென்பாண்டி சீமையிலே பாடலுக்கு அவரே கீபோர்டு வாசித்து, பாடியும் உள்ளார். 


இதையும் படிங்க: மாமியாருடன் நயன்தாரா எடுத்த கூல் செல்ஃபி... வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் அடக்க ஒடுக்கமான போஸ்...!

ஸ்ருதி ஹாசன் பாடியுள்ள தமிழ் சற்றே சறுக்கினாலும், இசை சூப்பராக உள்ளது. ஸ்ருதியின் குரலில் இந்த பாடலை கேட்ட நெட்டிசன்கள் பலரும் உங்கள் குரல் எங்களை மயக்குகிறது என்று தாறுமாறாக புகழ்ந்து வருகின்றனர். 
View post on Instagram