உலக நாயகன் கமலின் மகள் ஸ்ருதி ஹாசன் தற்போது பகிர்ந்துள்ள ஹாட் ஹிக் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதிஹாசன். பிரபல பாப் பாடகியாவார். வெளிநாட்டு படகியான இவர் அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்றார். சுருதிஹாசன் தனது 6 வயதில் முதல் பாடலை பாடினார். தேவர் மகன் படத்தில் போற்றி பாடடி பெண்ணே என்னும் பாடலை பாடினார். இதன் பிறகு சாச்சி 420 என்ற இந்தி படத்திலும், ஹே ராம் , என் மன வானில், வாரணம் ஆயிரம், லக் மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார்.
பிரபல பாடகியான இவர் கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ஹே ராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு சோகன் சா இயக்கத்தில் உருவான லக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவந்த இந்த திரைப்படம், வணிக ரீதியில் தோல்வியை சந்தித்தது. பின்னர் தமிழில் கடந்த 2011இல் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைபடத்தில் நடித்தார்.

தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நாடிகையாக வலம் வருகிறார். தெலுங்கில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் 'சலார்' படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர கோபிசந்த் மாலினேனி இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் 61 வயது நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் சுருதி.
இதற்கிடையே லண்டனைச் சேர்ந்த மைக்கேல் என்ற நாடகக் கலைஞரை சில ஆண்டுகள் காதலித்து வந்த ஸ்ருதி பின்னர் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவரை கடந்த 2019ம் ஆண்டு பிரேக் அப் செய்து விட்டார்.. இதையடுத்து தற்போது டெல்லியைச் சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார்.

தனது காதலனுடன் அடிக்கடி கிளாமர் போட்டோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒர்கவுட் செய்து விட்டு அசதியுடன் எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த வீடியோவில் அசதியை விட கிளாமர் தான் ரொம்ப தூக்கலாக உள்ளது.
