shruthihassan participate with lover in ahav kannathaasan marriage

பொன் மாலைப் பொழுது திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர், கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ். இவருக்கும் வினோதினி என்கிற பெண்ணுக்கும் கடந்த ஆறு மதத்திற்கு முன் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில் இவர்களுடைய திருமணம் 'மேயர் ராமநாதன் செட்டியார் சென்டரில்' மிக பிரமாண்டமாக நடந்தது. இந்தத் திருமணத்தில் இரு வீட்டைச் சேர்ந்த உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் நடிகர் கமலஹாசன் ஆதவ் திருமணத்திற்கு தன்னுடைய மகள் ஸ்ருதிஹாசன், மற்றும் மகளின் காதலரோடு வந்து வாழ்த்தினார். இந்த திருமணத்தில் கலந்துகொண்ட ஸ்ருதி பட்டுப் புடவையும், மைகேல் பட்டு வேஷ்டியும் அணிந்திருந்தது கூடுதல் சிறப்பு எனக் கூறலாம்..!